புகை பழக்கத்துக்கு எதிரான இயக்கத்தில் லட்சுமி மேனன்

bec86964-c369-45d9-8d29-49b37b2e682c_S_secvpfகும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான லட்சுமிமேனன் கைவசம் தற்போது ‘சிப்பாய்’, ‘கொம்பன்’ என இருபடங்கள் உள்ளன. கொம்பன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். இரு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.
பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்காக இப்போது நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கேரளாவில் முகாமிட்டுள்ளார். அத்துடன் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்திலும் அவர் சேர்ந்து இருக்கிறார்.
இதன் மூலம் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். ‘நீங்கள் விட்டு விடுங்கள் நானும் விட்டு விடுகிறேன்’ என்ற வாசகத்துடன் கூடிய அட்டையை கையில் பிடித்த படி போஸ் கொடுத்து அதை பேஸ்புக்கிலும் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
புகைப்பிடிக்கும் இயக்கத்துக்கு எதிராக இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. உங்களின் அன்புக்குரியவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நீங்களும் உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள்.
நீங்கள் புகைப்பிடிப்பதை கைவிட நான் என் கெட்ட பழக்கத்தை விடுகிறேன் என்ற தகவலை அதிகம் பகிருங்கள் புகைபழக்கத்துக்கு எதிரான இயக்கத்தில் இணையுங்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply