பிரபல இயக்குனருக்கு தனது இசையை புரியவைக்க 6 மாத காலம் கஷ்டப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்

cdcda9bd-9d56-48bf-9264-de77e649884f_S_secvpfஆஸ்கார், கிராமி என்று இசை உலகின் அனைத்து உச்சங்களையும் அடைந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். எந்த அங்கீகாரத்தையும் பொருட்படுத்தாமல், நாம் சர்வதேச இசை ஆல்பங்கள் அனைத்தையும் கேட்கிறோம்.

ஆனால் சர்வதேச இசை விரும்பிகள் நம் இசையை கேட்பதில்லையே என்ற கேள்வியை முன் வைத்து அதற்கான பதிலைக் கண்டடையும் வகையில் கண்டங்கள் கடந்து தனது இசைத்தேடலை விஸ்தரித்தபடியே இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

சில்ட்ரன் ஆப் ஹெவன், கலர் ஆப் பேரடைஸ், பரான் போன்ற படங்களின்மூலம் உலக சினிமாவின் பார்வையை ஈரானை நோக்கி திரும்ப வைத்த மஜித் மஜித், விருது பெறாத நாடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர்.

இசை மற்றும் சினிமாவின் உச்சங்கள் இரண்டும் தற்போது ‘மொகமத்’ என்ற படத்திற்காக இணைந்துள்ளது. இந்த படத்திற்கு இசை அமைத்த அனுபவம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் “என்னுடன் பணிபுரிந்த எல்லா இயக்குனர்களுக்கும் என்னுடைய வேலை பற்றியும் இசை பற்றியும் தெரியும், காரணம் அவர்கள் என்னை 20-25 வருடங்களாக பார்த்து வருகின்றனர்.

ஆனால் மஜித்துக்கு என்னுடைய வேலையைப் பற்றியோ என்னைப் பற்றியோ எதுவும் தெரியாது. இந்த படத்திற்காக முதன் முதலாக நான் இசையமைத்த ஒரு ட்யூனை அவருக்கு போட்டுக் காட்டியபோது “இது.. என்ன?” என்று கேட்டு விட்டார்.

அவர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்? என்று புரிந்து கொள்வதற்காகவே அவரை பலமுறை சந்திக்க வேண்டியிருந்தது. பிறகு நான் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அவரை மற்ற இசையமைப்பாளர்களின் இசையை கேட்க வைத்தேன். பிறகு, ஒருவழியாக அவரது விருப்பத்தை நான் புரிந்து கொண்டு பட்டியலிட்டேன். இப்படித்தான் அவரது எதிர்பார்ப்பை நான் புரிந்து கொண்டேன்” என்றார்.

Leave a Reply