பாயும் புலி – மீண்டும் ரஜினி படப் பெயரை கைப்பற்றிய விஷால்

1416802503-4781சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்துக்கு, சாகித்ய அகதாமி விருது பெற்ற சு.வெங்கடேசனின், காவல் கோட்டம் நாவலின் பெயரை வைத்திருப்பதாக சென்ற வாரம் செய்தி வெளியானது.
ஆனால், படத்தின் பெயர் காவல் கோட்டம் கிடையாது என்றும், பாயும் புலி என பெயர் வைத்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாயும் புலி ரஜினி நடித்த பழைய படத்தின் பெயர். ஏற்கனவே தான் தயாரித்து நடித்த படத்துக்கு, நான் சிவப்பு மனிதன் என்று ரஜினி படத்தின் பெயரை வைத்தார் விஷால். இப்போது இரண்டாவது முறையாக ரஜினி படப்பெயரை தனது படத்துக்கு வைத்துள்ளார்.
காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார். படத்தை வேந்தர் மூவிஸ் தயாரிக்கிறது.

Leave a Reply