பாப் கட்டிங் கேரக்டருக்காக கூந்தலை வெட்ட மறுத்த ஆண்ட்ரியா

a68d0c79-362f-4cb4-8b45-46e9d55bf554_S_secvpfகமலுடன் உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 படங்களில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். மேலும் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்திலும் நடித்து இருக்கிறார். இவர் நடித்த வலியவன் படம் ரிலீசாக இருக்கிறது.
தற்போது மலையாள படமொன்றில் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. டைரக்டர் சொன்ன கதை ஆண்ட்ரியாவிற்கு பிடித்து போக அப்படத்தில் நடிக்க சம்மதமும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் படத்தில் தலைமுடியை வெட்டி பாப்கட்டிங்கில் வர வேண்டும் என்று டைரக்டர் நிபந்தனை விதித்திருக்கிறார். இதை கேட்டதும் ஆண்ட்ரியா அதிர்ச்சி ஆகியிருக்கிறார்.
தலை முடி தான் எனக்கு அழகு. ஒரு போதும் என் தலை முடியை வெட்ட மாட்டேன் என்று கூறி அந்த படத்தையும் உதறி விட்டிருக்கிறாராம்.

Leave a Reply