பருத்தி வீரன் போல் கொம்பனும் மிகப்பெரிய வெற்றி பெறும்: கார்த்தி பேட்டி

03ed9e91-2fc2-4e23-9e1f-ed09c9929086_S_secvpfநடிகர் சிவகுமாரின் உறவினர் இல்ல திருமண நிச்சயதார்த்தம் இன்று (புதன்கிழமை) கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் நடிகர் சிவகுமார், மகன் கார்த்தி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். பின்னர் கார்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் நடித்துள்ள கொம்பன் படம் வருகிற 2–ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் லட்சுமிமேனன், ராஜ்கிரன், கோவை சரளா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் மாமனார்–மருமகனுக்கு இடையே நடைபெறும் சின்ன சின்ன குடும்ப பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
மாமனாராக ராஜ்கிரனும், அம்மாவாக கோவை சரளாவும் நடித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பருத்திவீரன் படம் வெளியானது.
அந்த படத்தை போன்று கொம்பன் படமும் மாபெரும் வெற்றி பெறும். ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும். குடும்பத்துடன் சென்று படம் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply