நேற்று விஜய் இன்று அஜீத் நாளை விக்ரம்…?

அனிருத்தின் வளர்ச்சியைதான்எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இவர் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு இலக்கத்தை எட்டவில்லை, அதற்குள் எட்டு இலக்கத்தில் சம்பளம் பெறுகிறார்.விஜய்யின் கத்தி படத்துக்கு இசையமைத்தவர் அடுத்து சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.அதையடுத்து, ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. அரிமா நம்பியை இயக்கிய ஆனந்த் சர்மாவின் இரண்டாவது படம் இது.காஜல் அகர்வால் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Leave a Reply