நித்யா மேனன், ஸ்ரீதிவ்யா – யார் அஜீத்தின் தங்கை?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படம் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தியது. அஜீத்தின் தங்கை கதாபாத்திரம் படத்தில் பிரதானமாக வருகிறது.

இந்த வேடத்தில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஸ்ரீதிவ்யாவிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை.

சிவாவின் வீரத்தில் அண்ணன், தம்பிகள் பாசம் பிரதானமாக இருந்தது. இதில் அண்ணன், தங்கை. ஸ்ருதி ஸீரோயினாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் தொடங்குகிறது.

Leave a Reply