நான் நடிகை என்பது என் குழந்தைகளுக்கே தெரியாது- மனம் திறந்த ஜோதிகா

இந்திய சினிமாவின் ஈடு இணையிலா நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக ஜோதிகாவிற்கு என ஒரு இடம் இருக்கும். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கினார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

இது குறித்து பேசிய ஜோதிகா ‘நான் ஒரு நடிகை என்பதே என் குழந்தைகளுக்கு தெரியாது, ஏனெனில் அவர்கள் ஒரு நடிகர், நடிகையின் குழந்தைகளாக என்றுமே வளர கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

இதனால் தான் எந்த சினிமா விழாக்களுக்கும் அவர்களை அழைத்து வருவதில்லை, அவர்கள் கலந்து கொண்ட முதல் சினிமா விழாவே 36 வயதினிலே இசை வெளியீட்டு விழா தான்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply