நயன்தாராவின் பேய் படத்தை வாங்க போட்டி

3bcb6cb9-f64d-4703-9a71-b533ea00cedb_S_secvpfநயன்தாராவின் பேய் படத்தை வாங்க போட்டி ஏற்பட்டு உள்ளது.
தமிழ் பட உலகில் பேய் படங்களுக்கு வரவேற்பு உள்ளது. இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவிக்கின்றன. ரசிகர்களும் விரும்பி பார்க்கிறார்கள்.
சமீபத்தில் வந்த அரண்மனை படம் வசூலில் சக்கை போடு போட்டது. பிசாசு, டார்லிங் படங்களும் வசூல் பார்த்தன. முனி, காஞ்சனா பேய் படங்கள் லாபம் ஈட்டியதால் அதன் மூன்றாம் பாகத்தையும் லாரன்ஸ் எடுக்கிறார்.
அந்த வரிசையில் மாயா என்னும் பேய் படமும் வருகிறது. இதில் நயன்தாரா பேய் பிடித்தவர் கேரக்டரில் நடிக்கிறார்.
மந்திர தந்திர மாயா ஜாலங்களுடன் இந்த படம் உருவாகியுள்ளது. இதை அஸ்வின் சரவணன் இயக்குகிறார். நாயகனாக ஆரி நடிக்கிறார். கருணாஸ், அம்ஜத், ரோபோ சங்கர் போன்றோரும் உள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங், ரி ரீக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன.
இந்த படத்துக்கான வியாபாரமும் துவங்கியுள்ளது. பேய் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் இந்த படத்தை வாங்க கடும் போட்டி நிலவியது. விநியோகஸ்தர்கள் பலரும் இதை வாங்க முண்டியடித்தனர்.
தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கடும் போட்டிக்கு இடையே ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மாநிலங்களுக்கான உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமைகளுக்கான வியாபார பேரம் நடந்து வருகிறது.

Leave a Reply