நடிகர் சந்தானம் என் வளர்ச்சியை தடுக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன் பாய்ச்சல்

fb3d6632-59df-45de-a83d-4b7ac5ba2f3e_S_secvpfகாமெடி நடிகர் சந்தானம் என் வளர்ச்சியை தடுக்கிறார் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஏற்கனவே சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். பிறகு காமெடி வேடத்துக்கு மாறினார்.
சந்தானத்துடன் இணைந்து நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெற்றிகரமாக ஓடியது. சமீபத்தில் ரிலீசான விக்ரமின் ‘ஐ’ படத்திலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் தனது பட வாய்ப்புகளை சந்தானம் தடுப்பதாக பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவேசப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:– நான் சினிமாவில் வளர்வது சந்தானத்துக்கு பிடிக்கவில்லை. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தோம். அந்த படத்தோடு என்னை கழற்றி விட்டு விட்டார். இதர படங்களிலும் என் முக்கியத்துவத்தை குறைக்கிறார்.
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் ஒரு காட்சியில்தான் நடிக்க வைத்தார். அப்போது, என்னை அவர் சந்திக்கவே இல்லை. ‘‘பவர் ஸ்டாரை வளர்த்து விடாதே, பெரிய ஆள் ஆகி விடுவார்’’ என்று சந்தானம் கூட இருப்பவர்கள் அவரை தடுக்கின்றனர்.
‘யா யா’ படத்தில் சேர்ந்து நடித்தோம். அந்த படத்தின் போஸ்டரில் என் படத்தை போடக்கூடாது என்று தயாரிப்பாளர்களிடம் நிர்பந்தித்து உள்ளார். எனக்கு எதிரிகளே கிடையாது. ஆனால், சினிமாவில் நான் வளரக்கூடாது என்று நினைக்கிற ஆளாக சந்தானம் இருக்கிறார்.
இதையொல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். ஏற்கனவே ஜெயிலுக்கு போய் விட்டு வந்து இருக்கிறேன்.
நடப்பது எல்லாம் கடவுள் செயல் என்று கருதுகிறேன். எனக்கு நேரமும் சரியான இல்லை. ஏப்ரல் மாதம் வரை இப்படித்தான் இருக்கும். அதன் பிறகு எல்லாம் நன்றாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply