நடிகர் அலி சொன்ன சர்ச்சை கருத்துக்கு பதில் அளித்த சமந்தா

பிரபல தெலுங்கு நடிகர் அலி Son Of Sathya Moorthy இசை வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா பற்றி ஒரு சர்சையான கருத்தை தெரிவித்தார்.

அதாவது கத்தி படத்தில் சமந்தாவின் இடுப்பை பார்க்கும் போது விஜயவாடாவில் உள்ள பென்ஸ் வளைவு போல் உள்ளது. அவரது இடுப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

சமீபத்தில் இது பற்றி ஹைதராபாத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சமந்தா , எனக்கு அலி மிகவும் நெருங்கிய நண்பர், அவர் ஒன்றும் என்னை அவமானப்படுத்தும் நோக்கில் பேச மாட்டார், சும்மா ஜாலியாக தான் அதை தெரிவித்தார்.

எனக்கு அவரை பற்றி தெரியும், இதனால் எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றார்.

Leave a Reply