த்ரிஷாவையும் நயன்தாராவையும் எதிர்பார்த்து ஏமாந்த பொதுமக்கள்

Trisha_Illana_Nayanthara_Posterஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த கெருகம்பாகத்தில் தொடங்கியது. அங்குள்ள மாவு மில்லில் முதல்நாள் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் ஆதிக்.
படத்தின் பெயர் த்ரிஷா இல்லேன்னா என்பதால் த்ரிஷாவும், நயன்தாராவும் படப்பிடிப்புக்கு வருவார்கள் என்று ஏராளமான பொதுமக்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் குவிந்தனர்.
படத்தின் பெயரில் மட்டுமே அவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது அவர்களை பெரும் ஏமாற்றத்துக்குள் தள்ளியது.
ப்ளேபாய் டைப்பில் பெயர் வைத்தாலும், ஒரு அப்பாவி இளைஞனின் காதலும் அதில் நடக்கும் முக்கியமான சம்பவங்களுமே படத்தின் கதை என்றார் ஆதிக். கயல் ஆனந்தி ஹீரோயினாக நடிக்கிறார்.

Leave a Reply