தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், பயமாகவும் இருக்கிறது: பாபி சிம்ஹா

33e9fcc6-90a3-4459-80b1-d4895517b294_S_secvpfபீட்சா, நேரம், சூது கவ்வும் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பாபி சிம்ஹாவுக்கு ‘ஜிகர்தண்டா’ படம் அவரை தேசிய விருது அளவுக்கு உயர்த்தியது.
இந்த படத்திற்கு பிறகு அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. அந்த வரிசையில் தற்போது, உறுமீன், பாம்பு சட்டை, மசாலா படம், இறவி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் தற்போது உறுமீன் படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், இப்படக்குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பாபி சிம்ஹா பேசும்போது,
உறுமீன் படம் ஒரு திரில்லர் படம். ஆக்ஷன் மற்றும் சின்ன பேன்டசி படமும்கூட. அதாவது கதைப்படி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு பையன் வேலை தேடி சென்னைக்கு வருகிறான்.
அங்கு அவன் என்ன மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறான் என்பதை வித்தியாசமாக சொல்லியிருக்கிறோம். இப்படத்தை தொடர்ந்து உறுமீன், பாம்பு சட்டை, மசாலா படம், இறைவி, கவலை வேண்டாம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறேன் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, ஜிகர்தண்டா படம் என்னை தேசிய விருது வாங்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. இதுவரை வந்தோமா, ஏதோ படத்தில் நடித்தோமா என்று இருந்த எனக்கு, இந்த தேசிய விருது கிடைத்த பிறகு ஒவ்வொரு படத்திலும் நடிக்க ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் ஒருவித பயத்தை கொடுத்திருக்கிறது. அதனால், இனி ரசிகர்கள் எதிர்பார்க்கிற மாதிரி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கப் போகிறேன். நல்ல கதை அமைந்தால் வில்லன் கதாபாத்திரத்தில்கூட நடிப்பேன் என்று கூறினார்.

Leave a Reply