திருமணத்துக்கு முன் ஒரு திகில் படம் – த்ரிஷாவின் திடீர் முடிவ

த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு வாய்ப்புகள் குறையும் என்று பார்த்தால், இப்போதுதான் வாய்ப்பு மழை கொட்டுகிறது.த்ரிஷா நடித்துள்ள பூலோகம், அப்பாடக்கர் படங்கள் முடிந்து விரைவில் வெளிவர உள்ளன. இதுதவிர போகி என்ற படத்தில் நடித்து வருகிறார்.செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் த்ரிஷா நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திப் படம் ஸ்பெஷல் 26 -இன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ரீமேக்கில் த்ரிஷாதான் நாயகி என்றொரு தகவலும் உலவுகிறது.இந்நிலையில் தனது மேனேஜர் கிரிதர் தயாரிக்கும் திகில் படத்தில் நடிக்க உள்ளதாக த்ரிஷா அறிவித்துள்ளார். திகில் கலந்த காமெடிப் படமாக இது இருக்குமாம்.

Leave a Reply