திரிஷா நிச்சயதார்த்தத்தில் திரண்ட நடிகர்–நடிகைகள்: நட்சத்திர ஓட்டலில் இன்று விருந்து

9fe75430-1a37-4c5c-a638-0bb6673a518b_S_secvpfநடிகை திரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண்மணியன் வீட்டில் இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
வீடு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நிச்சய தார்த்தத்துக்காக விசேஷ சாமியானா பந்தலும் போட்டு இருந்தனர்.
திரிஷாவும் வருண்மணியனும் பெற்றோர் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றனர். பின்னர் திரிஷாவை தாய் உமா மற்றும் உறவினர்கள் அழைத்து போய் நிச்சயதார்த்த பந்தலில் அமர வைத்தனர்.
வருண்மணியனை அவரது பெற்றோர் அழைத்து போய் திரிஷா அருகில் உட்கார வைத்தனர். இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். நிச்சயதார்த்த மோதிரத்தையும் ஒருவருக்கொருவர் அணிவித்தனர்.
இந்த வருடமே, ஆறுமாதங்கள் கழித்து நல்ல நாளில் திருமணத்தை நடத்துவது என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் கமலஹாசன், பிரபு, ஜெயம் ரவி, சித்தார்த், விக்ரம் பிரபு, நடிகைகள் ராதிகா, குஷ்பு, கவுதமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிச்சயதார்த்தம் முடிந்ததையடுத்து திரிஷா இன்று நடிகர்–நடிகைகளுக்கு விருந்து கொடுக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் தமிழ், தெலுங்கு, கன்னட நடிகர், நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். எல்லோருக்கும் தனித்தனியாக திரிஷா அழைப்பு அனுப்பி இருக்கிறார்.
நிச்சயதார்த்தத்துக்கு அவர்களை அழைக்காததால் இந்த பிரத்யேக விருந்துக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். விருந்து நடைபெறும் ஓட்டல் அருகில் திரிஷா ரசிகர்கள் வழிநெடுக வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர்.

Leave a Reply