தலயின் வைர கீரிடத்தில் மேலும் ஒரு இறகு: மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் அஜித் முதல் இடம்

ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு தமிழில் தகுதியான நடிகர், எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை என்று சொல்லி தனக்கு ரசிகர்கள் கொடுத்த ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை துறந்தவர், இளம் பெண்களைக் கவர்ந்திழுக்கும் புன்னகைக்கு சொந்தக்காரர் என்ற பன்முகத்துக்கு பெயர்போன அஜித்துக்கு ‘தல’ என்கிற வைர கிரீடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது.

ஐடைம்ஸ் என்ற இணையதளம் ஒவ்வொரு வருடமும் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டத்திற்கு தகுதியான நபர்களை இணையதள வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். வாக்கெடுப்பின் அடிப்படையில் 25 பேர் கொண்ட பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் 2014-ம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டியலில் அஜித் குமார் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஓபனிங் கிங், பிரபல இயக்குனர்களின் விருப்பம், ரசிகர்களின் ஆதரவு என்று ஆல் ஏரியாவிலும் ரவுண்ட் கட்டி அடிக்கும் அஜித் 2013-ம் ஆண்டு இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருந்தார். தற்போது முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்த பட்டியலில் சூர்யா தொடர்ந்து 2-ம் இடத்திலேயே இருக்கிறார். 3-ம் இடத்தில் தனுஷ், தனுஷுக்கு அடுத்த இடத்தில் விக்ரம் இருக்கிறார். சென்ற வருடம் 5-ம் இடத்தில் இருந்த விஜய், தற்போது 8-வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

25-வது இடத்தில் இருந்த அதர்வா ‘இரும்புக்குதிரை’யில் சிக்ஸ் பேக் வைத்த ஸ்டைலிஷ் லுக்கில் தேறி 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுதவிர துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் போன்ற புதுமுகங்களும் இந்த படியலில் இடம்பிடித்துள்ளனர்.

முதலிடத்தை பிடித்த அஜித்துக்கு ஒவ்வொரு தமிழ் சினிமா காதலனின் இதயத்திலும் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Leave a Reply