டி ஷர்ட், ஜீன்ஸ், கூலரில் கலக்கும் கவுண்டமணி

தமிழ் சினிமாவின் ‘காமெடி கிங்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி.
கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், ‘ வாய்மை ‘, ‘49 ஓ’ போன்ற படங்களின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் கவுண்டமணி. வெளிவர தயாராகி இருக்கும், இந்தப் படங்களைத் தொடர்ந்து ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சினிமா படப்பிடிப்புக்கு கேரவனை வாடகைக்கு விடும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறார். கணபதி பாலமுருகன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இவர், சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சண்முகம் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் டி ஷர்ட், ஜீன், கூலர் என போட்டு இன்றைய யூத் நடிகர்களுக்கெல்லாம் போட்டியாக யூத் ஸ்டைலில் நடிக்கவுள்ளாராம் கவுண்டமணி.
இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மேலும் படத்தின் டைட்டில் பாடலுக்காக 16 விதமான டியூன்கள் போடப்பட்டு இது அத்தனைக்கும் விதவிதமான உடைகள் மற்றும் மேக்கப்பில் கவுண்டமணி நடிக்கப் போகிறாராம். அதோடு கவுண்டமணியின் புகழ் பெற்ற பல பன்ச் டயலாக்குகள் இடம்பெறும் வகையில் ஒரு பாடலும் படத்தில் இடம் பெறவிருக்கிறதாம். அடுத்த மாதம் 1-ம் தேதி படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாம்.

Leave a Reply