டால்பினுக்கு முத்தம் கொடுத்த ஹன்சிகா

83e829c5-eac2-4dc1-832e-fa7c46f4ebbe_S_secvpfநடிகை ஹன்சிகா டால்பினை முத்தமிடுவது போன்ற படம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். டால்பினை முத்தமிட்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்றும் கருத்து பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்காக சென்றபோது டால்பினுடன் இந்த படத்தை எடுத்து இருக்கிறார்.
ஹன்சிகா தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக இருக்கிறார். தமிழில் அவர் நடித்து சமீபத்தில் ரிலீசான ‘அரண்மனை’, ‘ஆம்பள’, ‘மீகாமன்’ படங்கள் பெயர் வாங்கி கொடுத்தன. அடுத்து சிம்புவுடன் நடித்த ‘வாலு‘, ஜெயம் ரவியுடன் நடித்த ‘ரோமியோ ஜுலியட்‘ படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.
மேலும், ‘புலி‘ படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் மூன்று படங்களும் கைவசம் உள்ளன. ஹன்சிகா பற்றிய ஆபாச குளியல் பட வீடியோ சமீபத்தில் இணைய தளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் பரவியது.
அந்த வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவர் தரப்பில் மறுக்கப்பட்டது. ஆனாலும் இந்த படம் ஹன்சிகாவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுத்து தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply