டாக்டர்கள், நர்சுகளுக்கு ஐ படம் சிறப்பு காட்சி: ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு

ff3ef6d7-5871-4a5a-8e1e-dc29c35fa6b4_S_secvpfவிக்ரம், எமிஜாக்சன், ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
பொங்கலுக்கு சென்னை அப்பல்லோ டாக்டர்கள் ‘ஐ’ படத்தை பார்க்க ஏ.ஆர்.ரகுமான் ஏற்பாடு செய்து கொடுத்தார். மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி அவர்களுக்கு விநியோகித்தார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். நர்சுகளும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர். இதன் மூலம் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் சேவையை நேரில் பார்த்த ஏ.ஆர். ரகுமானுக்கு பொங்கலை யொட்டி ‘ஐ’ படத்துக்கு அவர்களை அழைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவேதான் இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கி படம் பார்க்க வைத்தார். தாய் மேல் ரகுமான் அளப்பறிய பாசம் வைத்துள்ளார். அதன வெளிப்பாடாகவே இச்சம்பவம் அமைந்தது.

Leave a Reply