ஜெய் படத்தில் திரிஷாவுக்கு இடமில்லை

dee6f81a-0047-474e-9373-90d0ce36ff06_S_secvpfநடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலியவன்’ இந்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்து வரும் ‘புகழ்’ படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கும்பகோணத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஜெய்-க்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்தது. சந்தேகத்தின் பேரிலேயே வெளிவந்த இந்த செய்தி கடைசி வரை உறுதியாகாமலேயே போனது. இப்படத்தில் திரிஷா நடிப்பது உறுதிச் செய்யப்படவில்லை.
இந்நிலையில், தற்போது, ஜெய்க்கு ஜோடியாக வேறு ஒரு நடிகையை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். நடிகை தேர்வானதும் விரைவில் அறிவிக்கவுள்ளனர். இந்த படத்தில் ஜெய்-க்கு ஒரு அழகான நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர் படக்குழுவினர்.

Leave a Reply