சோனாக்ஷி சின்ஹாவுக்கு உற்சாகம் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

இப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் இந்தியில் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தது.
இப்படம் தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. தமிழில் வெளியான படத்தின் கதையில் சிலமாற்றங்கள் செய்து, இந்தியில் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்தி வெளிவந்தது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக சோனாக்ஷி சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் இருக்கிறேன்.
கேமரா முன் என்னால் காத்திருக்க முடியவில்லை. மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். என்னை வாழ்த்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ரஜினி வைத்து புதிய படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இப்போதைக்கு முருகதாஸ் இந்தியில் பிசியாகிவிட்டதால் ரஜினியை இவர் இயக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் எல்லாம் புரளிதான் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.