சூர்யா பட தலைப்பு மாற்றம்?

4da8fef4-f889-4306-8eae-9169b3579dee_S_secvpfசூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது ரிலீசுக்கு காத்திருக்கும் இப்படத்திற்கு புதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது இப்படத்தின் தலைப்பை மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

‘மாஸ்’ என்பது ஆங்கில தலைப்பு. இந்த தலைப்பில் படம் வெளியான வரி விலக்கு கிடைக்காது என்பதால் வேற தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் திகில் மற்றும் நகைச்சுவை படம் என்பதால் யு சான்றிதழ் கிடைக்கவும் வாய்ப்பிருக்காது என்பதால் படத்தலைப்பை மாற்ற உள்ளனர்.

இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது. படத்தின் தலைப்பை மாற்றுகிறார்களா? அல்லது மாற்றாமல் அப்படியே வெளியிடுகிறார்களா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply