சகாப்தம் ஆடியோ ஜன 31-ல் வெளியீடு: காதலர் தினத்தில் படம் வெளியாகிறது

இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பாக எல்.கே.சுதிஷ் தயாரித்துள்ளார். சகாப்தம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இதன் ஆடியோ வெளியீட்டை வருகிற ஜனவரி 31-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த இசை வெளியீட்டில் தமிழின் முன்னணி நடிகர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தின கொண்டாட்டமாக படத்தை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும், சிங்கிள் டிராக் வெளியானது குறிப்பிடத்தக்கது.