கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்கும் சற்குணம்

‘கடல்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான கௌதம் கார்த்திக், இப்படத்திற்குப் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் நடித்தார். இதன் பிறகு ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘இந்திரஜித்’, ‘ரங்கூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘வை ராஜா வை’ மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது கௌதம் கார்த்திக் மூன்று படங்களில் நடித்து வந்தாலும், மேலும் ஒரு புது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘வாகை சூடவா’, ‘களவாணி’ படங்களை இயக்கிய சற்குணம், கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.

தற்போது சற்குணம் ‘சண்டி வீரன்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக அதர்வா நடித்து வருகிறார். நாயகியாக ஆனந்தி நடித்து வருகிறார்.

இப்படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் முடிவடைந்த பிறகு கௌதம் கார்த்திக்கை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply