கௌதமின் அடுத்தப் படம், அச்சம் என்பது மடமையடா

அடுத்து சிம்புவை வைத்து இயக்கும் படத்துக்கு கௌதம், சட்டென்று மாறுது வானிலை என்ற தனது படத்தில் இடம்பெற்ற பாடல் வரியையே பெயராக வைத்தார். ஆனால் அதனை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்திருந்ததால் வேறு பெயரை பரிசீலனை செய்து வந்தனர்.
தற்போது பெயர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் எம்ஜிஆர் பாடல் வரிதான். அச்சம் என்பது மடமையடா.
என்னை அறிந்தால் படத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், என்னை அறிந்தால் வெளியாகிவிட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.