கோடை விடுமுறைக்கு தயாராகும் அப்பாடக்கரு

இப்போது கேளம்பாக்கத்தில் ஜெயம் ரவி, திரிஷா, சூரி, ராதாரவி, ரேகா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கும் காமெடி காட்சியை வேகமாக படமாக்கி வருகிறார்கள். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்த படம் குடும்பத்தினர் அனைவரையும் கவரும் படமாகவும், காமெடி சரவெடியாகவும் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஒவ்வொருவரும் இதற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பூலோகம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘ரோமியோ ஜூலியட்’ படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வருடத்தில் இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகும் என நம்பப்படுகிறது.