கில்லாடி இந்தமுறையும் கிரேட் எஸ்கேப்

1422694617-3275எட்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் கில்லாடி. ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பரத், நிலா நடிக்க சேலம் சந்திரசேகர் தயாரிப்பு.
கடந்த எட்டு வருடங்களில் ஒரு டஜனுக்கும் அதிக ரிலீஸ் தேதிகள் அறிவித்தனர். சொல்லி வைத்த மாதிரி அந்த தேதிகளில் படம் வெளியாகவில்லை. இந்த வருடமும் கில்லாடியின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது.
நேற்று படம் திரைக்கு வரும் என்று விளம்பரங்கள் செய்திருந்தனர். ஆனால் கடைசிவரை படம் வெளியாகவில்லை. நிலாவின் குளியல் காட்சி, பரத்தின் ஆக்ஷன் அடிதடி, எம்.ஜி.ஆர். ரசிகர்களை கவர அவரது கட்அவுட்டுக்கு பால் ஊற்றி ஒரு போற்றி பாடடி பெண்ணே ஸ்டைல் பாடல்…. ம்ஹும் இவ்வளவு இருந்தும் இன்னும் போணியாகவில்லை படம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தற்போது பஞ்சாயத்து நடப்பதாக கேள்வி.

Leave a Reply