கார்த்தி படத்திலிருந்து விலகிய ஸ்ருதிஹாசன்

c75e6ef4-f228-4256-9b8c-aa0309fba270_S_secvpfகார்த்தி நடிப்பில் தற்போது வெளியாக உள்ள படம் ‘கொம்பன்’. இதில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். மேலும் இதில் ராஜ்கிரண், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தையடுத்து நாகர்ஜூனாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் கார்த்தி படத்திலிருந்து விலகியிருப்பது கால்ஷீட் பிரச்சனை என்று கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி’ படத்திலும், மகேஷ் பாபுவுடன் இணைந்து தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இதை தவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் ஸ்ருதி நடிப்பில் வெளிவரவுள்ள கப்பார் படத்தின் புரமோஷனுக்காகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதன் காரணமாகவே கார்த்தி படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியிருக்கிறார். இதையடுத்து கார்த்திக்கு புது ஜோடியை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply