காமெடி எலியை பாலோவ் பண்ணி பிரெஷ்ஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு

b54d878a-c034-4894-a59b-e6189fae576e_S_secvpf
வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘எலி’. இப்படத்தை யுவராஜ் இயக்கியுள்ளார். இவர் வடிவேலு நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கியவர். தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர்.
இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். சமீபத்தில்கூட இருவரும் ஆடிப் பாடிய பாடல் பெரிய பொருட்செலவில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்திற்காக சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தனியாக வலைப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்தபின் வடிவேலு பேசும்போது, ஹலோ டூட்ஸ்.
நான் இப்ப நடிச்சிட்டு இருக்கிற படம் பேரு எலி. இந்த படத்துல காமெடில எலி டிராவல் பண்ணாத ரூட்டே கிடையாது. மொத்தத்துல இது ஒரு காமெடி எலி, கலக்கல் எலி, உங்கள பூரா வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் பேறா உங்க வீட்டு எலி.
நான் இப்படி ராகம் போட்டு பேசுனதுனால லேகியம் விக்கிறேன்னு நினைச்சுறாதீங்க. உடனே போய் பேஸ்புக்லயும், டுவிட்டர்லயும், இந்த காமெடி எலிய பாலோவ் பண்ணி உடம்புல இருக்கிற பிரெஷ்ஷரையும் சுகரையும் சரட்டு புரட்டுன்னு இறக்கிட்டு, கலகலன்னு குழந்தை குட்டியோட சிரிச்சு மகிழுங்கோ. மஸ்ட் வாட்ச் த ரேட் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

Leave a Reply