காக்கி சட்டை – சிவ கார்த்திகேயன் படங்களில் அதிக ஓபனிங்

1418205168-5264உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, பரீட்சை என்று படம் வெளியாவதற்கு சாதகமற்ற சூழலில் காக்கி சட்டையை வெளியிட்டார்கள். ஆனால் வசூல்…?
சென்னையில் மட்டும் முதல் மூன்று தினங்களில் காக்கி சட்டை 1.51 கோடியை வசூலித்தது. தமிழகத்தில் முதல் நான்கு தினங்களில் வசூல் 15.58 கோடிகள்.
சிவ கார்த்திகேயன் நடித்தப் படங்களில் இதுவே அதிகபட்ச ஓபனிங் வசூல். இத்தனைக்கும் படத்துக்கு நேர்மறை விமர்சனங்களைவிட எதிர்மறை விமர்சனங்களே அதிகம்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே இப்போது காக்கி சட்டை. தொடர்ந்து ஐந்தாவது ஹிட்டை பதிவு செய்துள்ளார் சிவ கார்த்திகேயன்.

Leave a Reply