கல்யாணராமன் ரீமேக்கில் திரிஷா: கமலுக்கு பதிலாக 2 வேடங்களில் நடிக்கிறார்

fad6a2f5-02ae-4500-95f8-6738bd27d724_S_secvpfகல்யாணராமன் படம் ரீமேக் ஆகிறது. இதில் கமல் கேரக்டரில் திரிஷா நடிக்கிறார்.
கல்யாணராமன் திரைப்படம் 1979–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அதில் கமல் இரு வேடங்களில் நடித்திருந்தார். நாயகியாக ஸ்ரீதேவி நடித்தார்.
ஜி.என். ரங்கராஜன் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார். இப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியது.
இந்த படத்தில் இடம் பெற்ற காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன், மலர்களில் ஆடும் இளமை புதுமையே, காதலின் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றிவைத்தேன் போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.
இதில் கமலஹாசன் மாற்றுத்திறனாளியாகவும், நாகரீக இளைஞனாகவும் இரு வேடங்களில் நடித்தார். மாற்றுத்திறனாளியை வில்லன்கள் கொல்வது போன்றும் பிறகு ஆவியாக வந்து இன்னொரு கமல் உதவியோடு பழிவாங்குவது போன்றும் திரைக்கதை அமைத்து இருந்தனர். தற்போது இந்த படத்தை ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.
இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று கேரக்டரை மாற்றுகின்றனர். கதாநாயகன் கேரக்டரில் கதாநயாகி வருகிறார். இதில் திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளியாகவும் மாடர்ன் பெண்ணாகவும் இரு வேடங்களில் வருகிறார்.
சமீபத்தில் அருள் நிதி நடித்து வெற்றிகரமாக ஓடிய மவுன குரு படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில் அருள்நிதி கேரக்டரில் சோனாக்சி சின்ஹா நடிக்கிறார். அது போன்று கல்யாணராமன் கேரக்டரும் மாற்றப்பட்டு உள்ளது.

Leave a Reply