கமலின் ஆக்ஷன் த்ரில்லர் – மொரிஷியஸில் தயாராகிறது

கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. உத்தம வில்லன் மே 1 வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

மற்ற இரு படங்கள் எப்போது வெளியாகும் என்பது தெரியாத நிலையில், புதிய படத்துக்கான வேலையில் தீவிரமாக உள்ளார் கமல்.

இந்த புதிய படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக மொரிஷியஸ் தீவில் ஏற்கனவே லொகேஷன் பார்த்துள்ளார் கமல். மேலே உள்ள கமலின் மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஜிப்ரானே இந்த ஆக்ஷன் த்ரில்லருக்கும் இசையமைக்கிறார்.

Leave a Reply