ஓகே கண்மணி படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு

3b586912-9d8b-4005-a7f6-38291e65ee26_S_secvpf
‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய படம் ‘ஓகே கண்மணி’. மணிரத்னத்தின் முந்தைய படங்கள் சரிவர போகாததால் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
படத்தின் ஹீரோவாக மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இதுவரை தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ரம்யா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.
‘அலைபாயுதே’ பாணியிலான ரொமான்டிக் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். சத்தமின்றி ஆரம்பிக்கப்பட்ட இப்படம் இப்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டிருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply