ஒரு கிலோ தங்கத்தை ஆதரவற்றோருக்கு வழங்கிய ஈழத்து சிறுமி ஜெசிக்காவுக்கு சூர்யா பாராட்டு

c052ce33-77e8-4df5-b9d7-c955d41c9425_S_secvpfவிஜய் டி.வி. சமீபத்தில் நடத்திய சூப்பர் ஜூனியர் சிங்கர் பட்டத்துக்கான பாட்டு போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்து சிறுமி ஜெசிக்கா இரண்டாவது பரிசு பெற்றார்.
‘ஊமை விழிகள்’ படத்தில் இடம் பெற்ற ‘‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை’’ என்று துவங்கும் பாடலை பாடி இந்த பரிசை வென்றார். அவரது இந்த பாடல் தமிழர்களை உணர்ச்சி பிழம்பாக மாற்றியது. போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ் கைதட்டி பாராட்டினார். இதுபோல் நிறைய பாராட்டுகள் குவிந்தன.
ஜெசிக்காவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. அந்த தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்தார்.
ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு அனைவரையும் சிலிக்க வைத்தது. அவரை நேரில் அழைத்து பாராட்ட நடிகர் சூர்யா முடிவு செய்தார். இதுபற்றி தகவல் ஜெசிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் சூர்யாவை சந்திக்க ஆர்வமாக சென்றார்.
ஜெசிக்காவை பார்த்ததும் சூர்யா அன்பாக வரவேற்றார். சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றதற்காக பாராட்டினார். இதுபோல் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்தினார். தனது மனைவி ஜோதிகா கொடுத்த பரிசையும் வழங்கினார். சூர்யாவை சந்தித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று ஜெசிக்கா தெரிவித்தார்

Leave a Reply