ஒருகாலத்திலும் நடிகனாக மாட்டேன் – அனிருத்

1419065416-7073அனிருத்தைப் பற்றி வரும் நான்கு செய்திகளில் இரண்டு, அவர் நடிகனாவது குறித்து இருக்கும். ஆனால், ஒருபோதும் நடிகனாக மாட்டேன் என அனிருத் கூறியுள்ளார்.
நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. வீடியோ ஆல்பத்தில் தோன்றப் போகிறோம் என்றதுமே எப்படி ஆடப்போகிறோம், எப்படி நடிக்கப் போகிறோம் என்றுதான் எண்ணம் போகும். பல விஷயங்களில் கவனம் போகும் போது இசையில் முழுமையாக ஈடுபட முடியாது.
இரண்டு மூன்று நாள்கள் நடிக்கும் வீடியோ ஆல்பத்துக்கே இப்படி என்றால், படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை என அனிருத் கூறினார்.
ஆக, அனிருத்தும் நடிக்க வந்திடுவாரோ என ரசிகர்கள் பயப்பட தேவையில்லை.

Leave a Reply