ஐ படத்தில் அவதூறு வசனம்: சந்தானம், ஷங்கர் மீது திருநங்கைகள் பாய்ச்சல்

0c7f9caa-73b9-45da-ab11-f3c928ab642a_S_secvpfஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வில்லத்தனத்தில் திருநங்கை வேடம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கேரக்டரில் ஓ.ஐ.எஸ். ராஜானி என்ற நிஜமான திருநங்கையே நடித்து இருக்கிறார். இவர் பிரபலமான மாடலிங் ஆவார். ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட முன்னணி இந்தி நட்சத்திரங்களுக்கு இவர்தான் பேஷன் டிசைனராக இருக்கிறார். ‘ஐ’ படத்தில் விக்ரமை உருக்குலைக்கும் குரூர வில்லத்தனத்தில் வருகிறார்.
இந்த கேரக்டர் மூலம் திருநங்கைகளை அவமதித்துவிட்டதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து திருநங்கைகள் நலச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நம் சமூகத்தில் ஏற்கனவே திருநங்கைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ‘ஐ’ படத்தில் ஒஜாஸ் கேரக்டர் மூலம் இன்னும் மோசமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாங்கள் விமர்சிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தின் இறுதி காட்சியில் மட்டுமின்றி எப்போதுமே சந்தானம் திருநங்கைகளை தவறாகவே பேசி வருகிறார். ‘ஐ’ படத்துக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் வீட்டு முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். ‘ஐ’ படத்தை திருநங்கையர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply