ஏப்ரல் 6 முதல் 36 வயதினிலே பாடல்கள்

1426682944-8839நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள, 36 வயதினிலே படத்தின் பாடல்களை வரும் 6 -ஆம் தேதி சென்னையில் வெளியிடுகின்றனர்.
மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கிய, ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக், 36 வயதினிலே. ரோஷன் ஆண்ட்ரூவே தமிழ்ப் படத்தையும் இயக்கியுள்ளார்.
ஏப்ரல் 1 -ஆம் தேதி ஒரேயொரு பாடலை மட்டும் வெளியிட்டு, 5 -ஆம் தேதி பிற பாடல்களை வெளியிட முடிவு செய்திருந்தனர். கொம்பன் பிரச்சனை காரணமாக எதுவும் நடக்கவில்லை. தற்போது, 6 -ஆம் தேதி பாடல்களை வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர்.
இந்த விழா சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடக்கிறது.

Leave a Reply