ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் ஓ காதல் கண்மணி

21d931ab-857d-424a-a2da-11a6772aca48_S_secvpf‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யாமேனன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
‘அலைபாயுதே’ பாணியிலான ரொமான்டிக் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் பாடல்கள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. தற்போது இப்படம் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply