எனக்கு மட்டும் ஏன் இப்படி? வருத்தத்தில் அஞ்சலி

எனக்கு மட்டும் ஏன் இப்படி? வருத்தத்தில் அஞ்சலி - Cineulagam
அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என தரமான படங்களின் மூலம் நம்மை கவர்ந்தவர் அஞ்சலி. இவருக்கும் சர்ச்சைகளுக்கும் என்றுமே நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு பாரில் குடித்துவிட்டு தள்ளாடினார் என்று ஒரு செய்தி பரவியது. இது குறித்து இவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதில் ‘நான் ஐதராபத்தில் நண்பர்களுடன் ஒரு ரெஸ்டரெண்டிற்கு சென்றேன், அங்கு நான் ஜுஸ் தான் ஆர்டர் செய்தேன், ஆனால், அதற்குள் குடித்து விட்டேன் என்று வதந்தியை கிளப்புவது எந்த விதத்தில் நியாயம்?’ என்று வருத்தத்துடன் தன் விளக்கத்தை அளித்துள்ளார்.

Leave a Reply