உத்தம வில்லன் கொஞ்சம் நீளமாம்

சமீபத்தில் வெளியான கத்தி, லிங்கா, ஐ, என்னை அறிந்தால் படங்கள் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிக நேரம் ஓடியது. அதனால் லிங்கா, என்னை அறிந்தால் படங்களில் சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டன.

மே 1 வெளியாகவிருக்கும் கமலின் உத்தம வில்லன் இரண்டு மணி ஐம்பத்தியிரண்டு நிமிடங்கள் ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் உத்தம வில்லன் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள், ஆட்சேபத்துக்குரிய எந்தக் காட்சியும் இல்லை என யு சான்றிதழ் தந்தனர். சமீபத்தில் வெளிவந்த படங்களில் உத்தம வில்லனே சிறந்த படம் என அவர்கள் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

உத்தம வில்லனை தடை செய்ய வேண்டும் என்று காவி அமப்பு ஒன்று கோரிக்கைவிடுத்து பிரச்சனையை கிளப்பியுள்ளதால், விஸ்வரூபம் போல் உத்தம வில்லனையும் சர்ச்சைகளே சக்சஸ் ஆக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply