உத்தமவில்லனில் எந்த காட்சியையும் வெட்ட விடமாட்டேன்: கமல் உறுதி

a376cc24-2723-4be2-8bee-1344c45d1516_S_secvpfகமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படம் வருகிற மே-1 ந் தேதி வெளியாகியுள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் வைஷ்ணவர்களை புண்படுத்தும்படியான காட்சிகள் இருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். தற்போது நடிகர் கமலும் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, உத்தமவில்லன் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இல்லை. இதை நான் அடித்துச் சொல்வேன்.

இந்த சர்ச்சைகளை யாரும் உண்மை என்று நம்பவேண்டாம். விஸ்வரூபம் படத்தில் சில இன்னல்களை நான் சந்தித்தால் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

ஆனால் இம்முறை உத்தமவில்லன் விஷயத்தில் எந்தவொரு காட்சியையும் வெட்ட விடமாட்டேன். நாங்கள் எப்படி படம் எடுத்தோமோ அப்படியே ரசிகர்களின் பார்வைக்கும் கொண்டு வருவோம் என்று கூறினார்.

Leave a Reply