இறுதியாக வெளியானது வாலு படத்தின் ரிலீஸ் தேதி

சிம்பு நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்த படங்களும் வெளிவரவில்லை. இவருடைய நடிப்பில் வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.

இதில் வாலு படம்தான் முதலில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இரண்டு முறை படத்தின் ரீலிஸ் தேதி அறிவித்தும் படம் வெளிவராமல் தள்ளிப் போனது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் மே 9-ந் தேதி படத்தை வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிம்புவும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சிம்பு-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் விஜய் சந்தர். தமன் இசையமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.சக்கரவர்த்தி பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Leave a Reply