ஆவி பறக்கும் டீக்கடைக்கு ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்-சூரி

8fa4407e-2f71-4566-9fb8-e7ea659c1d0e_S_secvpfசிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி மீண்டும் சேர்ந்திருக்கும் புதிய படம் ‘ரஜினிமுருகன்’. இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கி வருகிறார். தனது முந்தைய படத்தைப் போலவே இப்படத்தையும் கிராமப் பின்னணியில் எடுத்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் இப்படத்தில் டீக்கடை ஓனராக வருகிறாராம். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘ஆவி பறக்கும் டீக்கடை’ என்று தொடங்கும் பாடலுக்கு சிவகார்த்திகேயனும்-சூரியும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
ஏற்கெனவே, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனும், சூரியும் இணைந்து 2 பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். அந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தது. அந்த வரிசையில் இந்த பாடலும் அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Leave a Reply