அனேகன் படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம்: சலவை தொழிலாளர்கள் அறிவிப்பு

மாநில தலைவர் மாரிச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாயாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினர்.
கூட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளது. அதை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல் ‘அனேகன்’ படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.