அட்லீ கதையில் நடிக்கும் ஜீவா

241dc364-5ace-491c-84e0-b6c08579d47b_S_secvpfஜீவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘யான்’. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில், தற்போது ‘ராஜாராணி’ படத்தை இயக்கிய அட்லீயின் உதவியாளர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு அட்லீ கதை மற்றும் திரைக்கதையை எழுதவுள்ளாராம். ஆர்யாவின் தி நெக்ஸ்ட் பிக் பிலிம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு முடிவான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
இயக்குனர் அட்லீ, அடுத்தததாக விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். விஜய் தற்போது ‘புலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் அப்படத்தை முடித்துவிட்டு அட்லீயுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply