அஜீத் பிறந்தநாளில் சூர்யா படமா?

மாஸின் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் உள்ளதால், போஸ்ட்புரொடக்ஷனை முடித்து மே ஒன்று அஜீத்தின் பிறந்தநாளில் படத்தை வெளியிடுகின்றனர் என தகவல் பரவியுள்ளது.
அஜீத்துக்கும் சூர்யாவுக்கும் இடையே ஒரு மௌன யுத்தம் பல வருடங்களாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே கௌதமின் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து சூர்யா விலகியதும், கதைகூட கேட்காமல் உங்கப் படத்தில் நான் நடிக்கிறேன் என்று கௌதமுக்கு என்னை அறிந்தால் படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார் அஜீத். அவரது பிறந்தநாளில் சூர்யா படமா?
நோ சான்ஸ் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.