அஜீத் படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்: வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்

Yennai%20Arindhaal24அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழு அதிகாரிகளும் உறுப்பினர்களும் இந்த படத்தை பார்த்து ‘யு.ஏ.’ சான்றிதழ் அளித்துள்ளனர். இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
‘யு’ சான்று பெற்றால்தான் அரசு வரி விலக்குக்கு தகுதி பெறும். ‘யு.ஏ.’ சான்றால் வரிவிலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தணிக்கை மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்பலாமா என யோசிக்கின்றனர். அதிக வன்முறை காட்சிகள் இருப்பதாலேயே ‘யு.ஏ.’ சான்று அளிக்கப்பட்டதாக பேசப்படுகிறது.
வருகிற 29–ந்தேதி ‘என்னை அறிந்தால்’ ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அஜீத் போலீஸ் அதிகாரியாக வருகிறார். நாயகிகளாக திரிஷா, அனுஷ்கா நடிக்கின்றனர். அருண் விஜய்யும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

Leave a Reply