அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பது கஷ்டமா?

அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிப்பது கஷ்டமா? - Cineulagam
இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான். இவர் படம் வருகிறது என்றாலே பாக்ஸ் ஆபிஸில் சரவெடி தான்.
அந்த வகையில் சமீபத்தில் வந்த தகவலின் படி தமிழ் நாட்டு படங்களின் வெளி நாட்டு வசூலில் முதல் மூன்று இடத்தை ரஜினி தான் பிடித்துள்ளார்.
இதில் எந்திரன் 12 மில்லியன் டாலர், சிவாஜி 8 மில்லியன் டாலர் என முதல் 2 இடங்களை பிடித்துள்ளது. இந்த பாக்ஸ் ஆபிஸில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் கலவையான விமர்சனங்களை சந்தித்த லிங்கா 6 மில்லியன் டாலர் வசூல் செய்து 3ம் இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் தான் விஜய், அஜித் படங்கள் இருக்கிறதாம். இந்த சாதனையை இவர்கள் எட்டிப்பிடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.

Leave a Reply