அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்துக்கும் இசையமைக்கும் அனிருத்

அஜித் படத்திற்கு முதன்முதலாக இசையமைக்கும் அனிருத், இப்படத்திற்காக தெலுங்கில் இசையமைக்க வந்த வாய்ப்பைக்கூட உதறித்தள்ளினார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அரிமாநம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்குத்தான் அனிருத் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ’ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற பாடலை அனிருத் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் அஜித்-விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கவுள்ளது அனிருத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.